குடித்து விட்டு நிர்வாண கோலத்தில் பணிப்பெண்ணிற்கு செக்ஸ் தொந்தரவு தந்த பயணி…!

xfliftலிஸ்பன்: போர்ச்சுக்கல் நாட்டு விமானத்தில் நடுவானில் பயணி ஒருவர் மது போதையில் ஆடைகளை களைந்து விட்டு, விமானப் பணிப்பெண்ணிற்கு பாலியல் தொந்தரவு தந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சன் எக்ஸ்பிரஸ் பயணிகள் விமானம் ஒன்று போர்ச்சுகல் நாட்டின் டப்ளின் விமான நிலையத்தில் இருந்து துருக்கி நோக்கி புறப்பட்டது. விமானம் நடுவானில் பறக்கத் தொடங்கியதும், அதில் இருந்த பயணி ஒருவர் மது போதையில் ரகளை செய்ய ஆரம்பித்து விட்டார். யாரும் எதிர்பார்க்காத நிலையில், தனது ஆடைகளைக் களைந்து நிர்வாணமான அப்பயணி, விமானப் பணிப்பெண் ஒருவரிடமும் தகாத முறையில் நடக்கத் தொடங்கினார். அதனைத் தொடர்ந்து விமானம் அவசரமாக பெல்கிரேடில் தரையிறக்கப்பட்டது. ரகளையில் ஈடுபட்ட விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டார். பாதுகாப்பு அதிகாரிகளின் விசாரணையில், ரகளை செய்த நபர் அயர்லாந்து நாட்டுக்காரர் எனத் தெரிய வந்தது.

பொதுவாக தொழில்நுட்ப காரணங்கள் மற்றும் மருத்துவ உதவிகளுக்காக விமானம் அவசரமாகத் தரையிறக்கப்படுவது வழக்கம். ஆனால் முதன்முறையாக பயணி ஒருவரின் தகாத நடவடிக்கையால் விமானம் தரையிறக்கப் பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

soruce: http://tamil.oneindia.com
[rss-marquee rssfeed="RSS1"]