விபச்சார பெண்களை எய்ட்ஸ் நோயாளியுடன் உறவு கொள்ள வைத்து ரசித்த புரோக்கர்! கேரளாவில் ஷாக்

கொச்சி: கேரள செக்ஸ் கோல்மால் புது கட்டத்தை நோக்கி சென்றுகொண்டுள்ளது. அம்மாநிலத்தின் விபச்சார புரோக்கர் ஒருவன் கொடுத்துள்ள வாக்குமூலம், அவன், கஸ்டமர்களின் வயிற்றில் புளிகரைப்பதாக உள்ளது.

ஆன்லைனில் விபச்சாரம் செய்து வந்த மாடல் அழகி ரஷ்மி மற்றும் அவரது கணவர் ராகுல் பசுபாலன் ஆகியோர் கைது செய்யப்பட்ட நிலையில், ஆன்லைன் செக்ஸ் கும்பல்களுக்கு போலீசார் வலைவீச தொடங்கினர்.

அப்படி சிக்கியவன்தான், ஜோஷி அகா அச்சயன். கோழிக்கோட்டை சேர்ந்த அச்சயன் போலீசாரிடம் அளித்துள்ள வாக்குமூலத்தில் ஒரு திடுக்கிடும் தகவல் வெளி வந்துள்ளது.

எய்ட்ஸ் பரிமாற்றம்: இதுகுறித்து கூறப்படுவதாவது: பெண்களை கடத்திவரும் அச்சயன், அந்த பெண்கள் தப்பியோடிவிடுவர் என்ற சந்தேகத்தின்பேரில், முதலில் ஒரு எய்ட்ஸ் பாதித்த நோயாளியுடன் உறவு கொள்ளச் செய்வானாம். அச்சயனின் 23 வயது டிரைவர் எய்ட்ஸ் பாதிக்கப்பட்ட நபர். அந்த டிரைவரை கொண்டு, பெண்களை பலாத்காரம் செய்ய வைக்கும் அச்சயன், பிறகு, வாடிக்கையாளர்களுக்கு அந்த பெண்களை கைமாற்றிவிடுவானாம்.

வாடிக்கையாளர்: குறிப்பாக, தனக்கு பிடிக்காத, எதிரி கும்பலுக்கு அந்த பெண்ணை கைமாற்றிவிடுவது வழக்கம். வாடிக்கையாளர்கள் அந்த பெண்களுடன் உறவு வைத்துக்கொண்ட பிறகு மெதுவாக போன் மூலம், அவர்களுக்கு விஷயத்தை சொல்வது அச்சயன் வழக்கமாம்.

ரசிப்பு: எய்ட்ஸ் பாதித்த பெண்ணுடன் உறவு வைத்துக்கொண்ட தகவல் அறிந்த பிறகு அந்த வாடிக்கையாளர் நிம்மதியின்றி தவிப்பதையும், பிறகு எய்ட்ஸ் பாதிக்கப்பட்டு அவர் துடிப்பதையும் பார்த்து ரசிப்பது அச்சயன் பொழுதுபோக்கு. இவ்வாறு அச்சயன் வாக்குமூலம் அளித்த தகவல் வெளியாகியுள்ளது. கேரளாவில் இன்னும் எத்தனை பேர் விபச்சாரத்தால் பாதிக்கப்பட்டுள்ளர் என்பது வெளிச்சத்துக்கு வர வேண்டியுள்ளது

ரஷ்மியுடன் தொடர்பில்லை: அதேநேரம், ரஷ்மி மற்றும் ராகுலுடன் அச்சயனுக்கு தொடர்பு கிடையாதாம். அச்சயன் தனியாக விபச்சார புரோக்கராக செயல்பட்டுவந்துள்ளது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. போலீசார் கைது செய்து சிறைக்கு கொண்டு சென்றபோதுதான் ரஷ்மி மற்றும் அவரது கும்பலை முதலில் பார்க்க நேரிட்டதாக அச்சயன் வாக்குமூலம் கொடுத்துள்ளதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Videos:

ROBOT 2 Trailer 2016 Rajinikanth Akshay Kumar Amy Jackson

[rss-marquee rssfeed="RSS1"]